மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருப்பம் இல்லை – நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவிப்பு!

Tuesday, October 17th, 2023

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருப்பம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் போது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின், நாட்டில் ஏனைய பொருட்களின் விலையும் அதிகரிக்கக்கூடும்.

இதனால் மக்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். எனவே, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: