மின்கட்டண உயர்வு குறித்து 3 நாட்களுக்குள் தீர்மானம் – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!

மின்சாரத்தை 30 முதல் 60 அலகுகளுக்குள் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களின் கட்டணத்தை பெருமளவில் அதிகரிக்காமல், ஏனைய வாடிக்கையாளர்களிடம் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தீர்மானம் எட்டப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணியை ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் எதிர்காலத்தில் மின் கட்டணத்தை டொலரில் செலுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாரிய நஷ்டத்தை தாங்கும் சக்தி மின்சார சபையிடம் இல்லை எனவும் எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களில் மின் கட்டணத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
30 தொடக்கம் 60 யூனிட் வரையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் பெறும் நுகர்வோரின் மின்சாரக் கட்டணங்கள் கணிசமான அளவில் அதிகரிக்காது மானியம் வழங்கவும் ஏனைய நுகர்வோரின் கட்டணங்களை அதிகரிக்கவும் உள்ளது எனவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|