மின்கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் மின்சாரம் விநியோகிப்பதில் பாரிய நெருக்கடி – மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே அறிவிப்பு!

மின்சார விநியோகத்துக்கான கட்டணமாக இலங்கை மின்சார சபைக்கு கிடைக்க வேண்டிய சுமார் 44 பில்லியன் ரூபா, இன்னமும் கிடைக்கப்பெறாதுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
எனினும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களை அசௌகரியப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என செய்தியாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பலர் தங்கள் மின்கட்டணங்களை செலுத்தத் தவறியுள்ளதாகவும், இவ்வாறு கட்டணம் செலுத்தாதவர்களின் மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், பொதுமக்கள் தொடர்ந்தும் மின் கட்டணத்தை செலுத்த தாமதிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்த அமைச்சர். தொடர்ந்தும் இதனை மேற்கொள்ளாமல் இருக்கமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|