மினுவன்கொட கொரேனா கொத்தணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Monday, November 16th, 2020

மினுவன்கொட கொரோனா கொத்தணி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவன்கொட கொத்தணியில் இதுவரை சுமார் 3106 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் இதில் 136 பேர் மட்டுமே தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் கடந்த ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமான கொரோனா தொற்றின் இரண்டாம் கொத்தணியின் மினுவன்கொட கொத்தணியை கட்டுப்படுத்த முடிந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கம்பஹாவில் இனிவரும் காலங்களில் எவரேனும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டால் அவர் இரண்டாம் அலையின் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பேலியகொட கொத்தணியைச் சேர்ந்த தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களின் காரணமாக அவர்களில் பலர் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: