மிதிபலகையில் செல்வோருக்கு புகையிரத திணைக்களம் விசேட கோரிக்கை!

Tuesday, April 11th, 2017

தமிழ் – சிங்கள பண்டிகை காலத்தில் தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், புகையிரதத்தின் மிதிபலகையில் செல்வதை தவிர்க்குமாறு புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

மிதிபலகையில் பயணம் செய்வதால் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை அண்மைய காலங்களில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் சித்திரை புத்தாண்டின் பொருட்டு தொடரூந்தில் பயணிப்பவர்கள், மிதிபலகையில் பயணிப்பதை தவிர்ப்பதன் மூலம் விபத்துக்களையும் குறைத்துக் கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: