மிக சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்தது இலங்கை!

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் இந்த வருடத்தில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு உலகின் மிக சிறந்த நாடுகளில் இலங்கை மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது என உலக புகழ் பெற்ற லோன்லி ப்லெனட் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
உலகின் மிக சிறந்த சுற்றுலா வழிக்காட்டி புத்தகமாக கருதப்படும் லோன்லி ப்லெனட் சஞ்சிகை, கடந்த வருடம், 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா தளமாக இலங்கை அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தாக்குதலின் பின்னர் இலங்கை இந்த பட்டியலில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் மீண்டும் இலங்கை இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதாக லோன்லி ப்லெனட் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஜேர்மனும், மூன்றாம் இடம் சிம்பாபேவிற்கும் கிடைத்துள்ளது. அடுத்த இடங்களில், பனாமா, கிர்கிஸ்தான், ஜோர்தான், இந்தோனேசியா, பெலரெஸ், சாப் டோம், பின்சிபே மற்றும் பேலிஸ் ஆகிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|