மிகை வரிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஏப்ரல் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானம்!

Saturday, March 26th, 2022

மிகை வரிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஏப்ரல் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நேற்று (25) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு 25 சதவீத  மேலதிக வரியை வசூலிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை வழங்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.

அத்துடன், நாடாளுமன்றத்தை ஏப்ரல் 5 ஆம் திகதிமுதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: