மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பகிரங்க அறிவிப்பு!

Tuesday, May 10th, 2022

அனைவரும் இணங்கினால் சிறந்த செயல்திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் உள்ளடங்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் பதவியை ஏற்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு டளஸ் அழகப்பெரும, மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பெயர்களும் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சகல தரப்பும் உடன்படுவதாக இருந்தால் அந்தப் பொறுப்பை ஏற்கத் தயார் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: