மாவையின் தாயார் மறைவு; டக்ளஸ் தேவானந்தா அனுதாபம்

Sunday, March 20th, 2016

தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியூடாக தனது அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.

நேற்று முன்தினம் (18) சண்டிலிப்பாயில் தனது 96 வது வயதில் திருமதி தையல்பிள்ளை சோமசுந்தரம் காலமானார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை(23) நடைபெறவுள்ள நிலையில் இன்றையதினம்  (20) அன்னாரது மகனான மாவை சேனாதிராஜாவுக்கு டக்ளஸ் தேவானந்தா தொலைபேசிவாயிலாக தனது அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.

இதனிடையே, தான் கொழும்பில் தற்போது தங்கியுள்ளதால்  இறுதி நிழ்வுகளில் கலந்துகொள்ளமுடியாமை தமக்கு வருத்தமளிப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது மாவை சேனாதிராஜாவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: