மாவிட்டபுரம் கந்தசாமிகோவில் முகவுத்தரத் தேர் பவளக் கால் நாட்டுவிழா எதிர்வரும் 20 ஆம் திகதி!

Saturday, January 12th, 2019

மாவிட்டபுரம் கந்தசாமிகோவில் முகவுத்தரத் தேர் பவளக்கால் நாட்டுவிழாவில் அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும்.

மாவிட்டபுரம் அருள்மிகு ஸ்ரீ கந்தசாமிகோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகவுத்தரத் தேர் பவளக்கால் விழா எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10. 30 மணிமுதல், 11.30 மணிவரை நடைபெறவுள்ளது.

மேற்படி பவளக்கால் விழாவில் பொதுமக்கள் கலந்துகொண்டு, முருகப் பெருமானின் திருவருளைப் பெறுமாறு அனைவரையும் தேர்த் திருவிழா உபயக்காரர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

அன்றையதினம் காலை 7.30 மணிக்கு ஸ்நபனா அபிஷேகமும், 8.30 மணிக்கு விஷேட பூசை ஆராதனைகளும், 10 மணிக்கு பவளக்கால் உள்வீதி திருஊர்வலமும், 10.30 மணிக்கு பவளக்கால் நாட்டுவிழாவும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலுள்ள தேர்களிலேயே மிகஉயரமான தேராகக் கருதப்படும் மாவிட்டபுரம் கந்தசாமிகோவிலின் முகவுத்தரத் தேரானது, 45 அடி உயரமானதாக ஸ்தபதி கந்தசாமி இளங்கோவன் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

7-2-1024x768

9-1024x768

10-1024x768