மாவட்ட ரீதியில் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகம்!

Sunday, October 29th, 2017

அடுத்த வருடம் நவம்பர் மாதமளவில் மாவட்ட ரீதியில் இலத்திரனியல் அடையாள அட்டையை விநியோகிக்க  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தினால் இலத்திரனியல் ஸ்மார்ட்  (Smart National Identity Card)  என்ற புதிய தேசிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தில் நடைபெற்ற இநத நிகழ்வில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

வவுனியாவுக்கு சென்ற போது அங்குள்ள மக்கள் அடையாள அட்டை பெறுவதில் அதிக சிக்கல்களை எதிர்கொண்டு வருவதை காண முடிந்ததாக குறிப்பிட்ட அமைச்சர் , அதனால் நாம் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகத்துடன் பேச்சு நடத்தினோம். இந்தப்பணி கடினமானது. இருப்பினும்  2018 நவம்பர் மாதமளவில் மாவட்ட ரீதியில் இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்க வேண்டும் என நான் ஆலோசனை வழங்கியுள்ளேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய தேசிய அடையாள அட்டை சர்வதேச தரத்துக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுளள்து. பொதுமக்கள் விரைவாகவும் இலகுவாகவும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன கூறினார்.

Related posts: