மாவட்ட ரீதியாக பதிவு செய்யும் நடவடிக்கை  – மனித உரிமைகள் ஆணைக்குழு!

Thursday, October 18th, 2018

காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட ரீதியாக இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த தினம் மன்னார் மாவட்டத்தில் காணாமல் போன 400க்கும் அதிகமானவர்களது விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காணாமல் போனோரது உறவினர்களிடம் இருந்து குறித்த விபரங்கள் திரட்டப்பட்டு, ஒழுங்குமுறைப்படி அவற்றை பதிவு செய்து ஆவணப்படுத்தி வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts: