மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு!
Friday, February 10th, 2023மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் வரும் 11 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செயற்பாடுகள் குறித்து இங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவீனங்களுக்காக நிதியமைச்சின் செயலாளர் விடுத்த கோரிக்கைக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக பெப்ரவரி மாதத்திற்கு 770 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்ததாக அதன் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான அறிவித்தல் தொடர்பில் நிதி அமைச்சிடம் இருந்து எவ்வித பதிலும் இதவரை வரவில்லை என நிமல் ஜி.புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|