மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திற்கு உள்ளது – ஜனாதிபதி செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, September 7th, 2021

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கான முழு அதிகாரமும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உள்ளதொன ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் ஐந்தாவது சரத்தின் பிரகாரம் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான அதிகாரம், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு இல்லை என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி முன்வைத்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு முரணான வகையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து அதனை நிவாரண விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல கடந்த 5 ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: