யாழ். மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செலுத்தியுள்ளது!

3 Wednesday, December 6th, 2017

சாவகச்சேரி நகரசபை தவிர்ந்த யாழ். மாவட்ட ஏனைய உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செலுத்தியுள்ளது.

யாழ் மாவட்டச் செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்றையதினம் இக்கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) மேலதிக நிர்வாகச் செயலாளர் ஜயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) தலைமையிலான குழுவினர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதன்போது கட்சியின் யழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேச நிர்வாக செய்லாளர்கள்  உடடிருந்தனர்.

கடந்தமாதம் 28ஆம் திகதி சாவகச்சேரி நகரசபைக்கான கட்டுப்பணத்தை குறித்த செயலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்!
நாளொன்றுக்கு 20 மில்லியன் ரூபா வருமானம் - வனஜீவராசிகள் அமைச்சர்!
சீனாவுடனான உறவு பலப்படுத்தப்படும்!- ஜனாதிபதி!
சர்வதேச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ல் தீர்ப்பு வழங்கினேன் - நீதிபதி இளஞ்செழியன்!
பேருந்துகளில் மீதிப்பணம் தராவிடின் அழையுங்கள்!