மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயார் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Tuesday, November 29th, 2022மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அமைக்க முன்மொழிந்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “முன்னாள் ஜனாதிபதி, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை நான் செவிமெடுத்தேன். அதனைச் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இது நல்லதென்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள நாம் இதற்கு முழுமையாக ஆதரவளிப்போம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கு தொடர்ச்சியான பங்களிப்பு. - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வத...
தற்போது நாடும் மக்களும் மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்கி வருகின்றனர் - பிரதமர் கவலை!
போதைப்பொருள் பாவனை உச்சம் - மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி - கல்வி அமைச்சர் சுசில் பிர...
|
|