மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி, இலங்கையிடம் வேண்டுகோள்!

Friday, September 15th, 2017

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொகமட் நஷீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி, இலங்கையிடம் மனித உரிமைகள் தொடர்பான சட்டதரணி அமால் க்லோனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மொஹமட் நஷீட் இலங்கையில் கால்பதிப்பாரானால் அவர் கைதுசெய்யப்படுவார் என இலங்கையிலுள்ள மாலைத்தீவிற்கான தூதுவர் மொஹமட் ஹூசைன் ஷரீப் இலங்கையின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருந்தார்

அவரது கைது குறித்து மாலைத்தீவு தமக்கு அறிவித்தால் மொஹமட் நஷீட்டை கைதுசெய்ய தாம் வீதியில் இறங்கி நடவடிக்கை எடுப்பதாகவும்  மாலைத்தீவிற்கான தூதுவர் குறிப்பிட்டிருந்தார்

ஐம்பது வயதான நஷீட் மாலைத்தீவில் ஜனநாயக முறைப்படி தெரிவான முதலாவது ஜனாதிபதி என்பதுடன், நான்கு வருடம் கடமையாற்றினார்எவ்வாறாயினும், 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத சட்டத்தின் கீழ் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

சிறைப்படுத்தப்பட்ட அவர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மாலைத்தீவில் இருந்து லண்டனுக்கு சிறை விடுதலையில் சென்றிருந்தார்.

மருத்துவ சிகிச்சையின் பின்னர் அவர், பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்தை கோரியிருந்தார்.அகதி அந்தஸ்த்து விண்ணப்பத்தினை நிராகரித்து, மாலைத்தீவு அரசாங்கம் அவரை மாலைத்தீவிற்கு மீள வரவழைக்க மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

இதேவேளை, மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டிற்கு எதிராக மாலைத்தீவு மேற்கொண்ட விசாரணை மற்றும் வழங்கப்பட்ட தண்டனை குறித்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல மனித உரிமை அமைப்புக்கள் விமர்சனங்களை வெளியிட்டிருந்தன.

Related posts: