மாலைதீவு கடலோர பாதுகாப்பு படையினரால் 24 இலங்கை மீனவர்கள் கைது!

Saturday, March 2nd, 2019

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 24 பேர் மாலைதீவு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிலாபம் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த மீனவர்களை விடுதலை செய்வது குறித்து மாலைதீவு அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.