மாலைதீவு அரசாங்கத்திற்கும் பிரித்தானியாவுக்கும் ராஜதந்திர ரீதியில் முறுகல் நிலை!

தவிர்க்க முடியாத காரணத்தினால், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து விலகிக்கொள்வதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து விலகுவதற்கான காரணத்தை கூற முடியாது எனவும் அதேபோல் விலகாமல் இருக்க முடியாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.மாலைதீவு ஜனநாயக கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட்டுக்கு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 13 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இந்த நிலையில், இந்த பிரித்தானியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு சென்றிருந்த நசீட்டுக்கு பிரித்தானியா அரசியல் தஞ்சம் வழங்கியது. இதனால் மாலைதீவு அரசாங்கத்திற்கும் பிரித்தானியாவுக்கு ராஜதந்திர ரீதியில் முறுகல் நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக பிரித்தானியா தலைமையிலான பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து மாலைதீவு விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
Related posts:
|
|