மாலைதீவில் கைதான இலங்கை மீனவர்கள் 21 பேர் விடுவிப்பு!

Wednesday, March 6th, 2019

கடந்த வெள்ளிக்கிழமை மாலைதீவில் கைதான 25 இலங்கை மீனவர்களில் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் தலையீட்டின் கீழ் குறித்த 21 பேரும் விடுவிக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

எனினும், விசாரணைகள் நிறைவடையும் வரை கைது செய்யப்பட்ட 4 படகோட்டிகளையும் மாலைதீவு அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நான்கு பேரையும் விடுவிப்பதற்கான கலந்துரையாடல்களை மாலைதீவு தூதுவராலயம் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட 21 பேரிடமும் வெளிநாட்டு கடவுச்சீட்டு இல்லாத காரணத்தினால் விரைவில் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்று கொடுத்து வானுர்தி மூலம் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பீ.ஹெரிசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: