மாலபே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா!

Sunday, March 5th, 2017
மாலபே இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதன்போது விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் பேராசிரியர் லக்ஷமன் ரத்னாயக்க, உபவேந்தர் பேராசிரியர் லலித் கமகே உள்ளிட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related posts: