மாலபே கல்லூரி பிரதம நிறைவேற்று அதிகாரி ரஷ்யா பயணம்!

Saturday, February 11th, 2017

யின் பிரதம நிறைவேற்று அதிகாரி திடீரென வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 6ஆம் திகதி மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரட்ன பயணம் செய்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அருகாமையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சமீர சேனாரட்னவிற்கு எவ்வித காயங்களும் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சம்பவம் இடம்பெற்ற போது சமீர அணிந்திருந்த ஆடைகளையும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர்கள் நேற்று பரிசோதனைக்காக பெற்றுக் கொண்டிருந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒர் நாடகம் என சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருவதுடன், சில காலமாக தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரானவர்கள் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் எனவும் சமீர தெரிவித்திருந்தார்.

சமீரவின் கல்வித் தகுதி குறித்தும் மருத்துவ பட்டப் படிப்பு குறித்தும் சில தரப்பினர் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், டொக்டர் சமீர சேனாரட்ன அவசரமாக ரஸ்யாவிற்கு பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

9-720x480

Related posts: