மாற்று வலுவுடையோர் விபரங்கள் கோரப்பட்டுள்ளன

Wednesday, May 24th, 2017

மாற்று வலுவுடையோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கான சேவைகளை வழங்குவதற்கும் ஏதுவாகப் பிரதேச செயலர் பிரிவு ரீதியாக விபரங்கள் திரட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  யாழ். மாவட்டச் சமூக சேவைகள் அலுவலகத்தினால் இதற்கான விபரங்கள் கோரப்பட்டுள்ளன.

ஊன்றுகோல், சக்கர நாற்காலி, முச்சக்கர வண்டி போன்றவற்றைப் பயன்படுத்துபவர்களினதும், யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் படுக்கையில் இருப்போர் ஆகியோரதும் விபரங்களை மேற்படி அலுவலகம் பிரதேச செயலர்களிடம் கோரியுள்ளது.

Related posts:


கடல் கொந்தளிப்பு! பலத்த மழைக்கு வாய்ப்பு - பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
அறத்தின் ஆட்சியையும் ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறித்து நிற்கிறது தீபாவளி திருநாள்- வாழ்த்துச் செய்தி...
இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விசேட சந்திப்பு!