மாற்றுத் திறனாளிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த நிவாரணம் – பிரதமர் துறைசார் அதிகாரிகளுக்கு மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்து!

ஊனமுற்றவர்கள் அடையாளங்காணப்பட்டு அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் மற்றும் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் சமுர்த்தி பயனாளர்களை கடன்கள் மற்றும் நிதி உதவிகளில் மாத்திரம் தங்கி வாழ்வோராக அன்றி தொழில்முனைவோராக சுயமாக முன்னேறக்கூடியவர்களாக மாற்றியமைப்பதற்கான முறையொன்றையும் உருவாக்குவது அவசியமெனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்..
அதேநேரம் சமுரத்தி கொடுப்பனவை பெறும், எனினும் அக்கொடுப்பனவு அவசியமற்றவர்களை நீக்குவதற்கு இதுவரை முறையான திட்டம் இல்லாத நிலையில், அவ்வாறான சமுர்த்தி பயனாளர்கள் வெளியேறும்போது அவர்களுக்கு 04 வீத சலுகை வட்டி விகிதத்தில் 5 இலட்சம் ரூபாய் கடன் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை செயற்படுத்துமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேநேரம் நாடு முழுவதும் 17 இலட்சத்து 62 ஆயிரத்து 655 குடும்பங்கள் சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுவரும் நிலையில் அதற்காக அரசாங்கத்தினால் வருடாந்தம் 53 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர் ஜனாதிபதி செயலணி ஊடாக அனைத்து அமைச்சுக்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலிலுள்ள குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் ஆகியோரை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|