மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபடுகின்ற மலசல கூடங்கள் அனைத்தும் மாற்று திறனாளிகளுக்கும் வழங்கப்பட  வேண்டும் – ஈ.பி.டி.பியின் கரச்சி பிரதேச சபை உறுப்பினர்!

Monday, May 7th, 2018

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபடுகின்ற மலசல கூடங்கள் அனைத்தும் மாற்று திறனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  கரைச்சி பிரதேச சபை ஆ சிவநேஷன் வலியுறுத்தி உள்ளார்

கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருகிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்

மாற்று திறனாளிகளுக்கு இருக்கை மலசல கூடங்கள் வழங்கபடுகின்ற போதிலும் அவை மந்த கதியில் நடைபெறுவதால் பல மாற்று திறனாளிகள் தொடர்ந்தும் பாதிக்கபட்டு வருவதாக அவர் தெருவித்தார்

இதனை விடவும் கிராமங்களில் தெரிவு செய்யபடும் சமூர்த்தி பயனாளிகளின் பெயர் பட்டியல் முறையாக காட்சிபடுத்தபட வேண்டும் பல கிராமங்களில் இவை காட்சிபடுத்தபடுவதில்ல இவ்வாறு சமுர்த்தி பயனாளிகள் பெயர் விபரங்கள் காட்சிபடுத்தப்டும் போது பொதுமக்கள் தமது சுய கருத்துக்களை தெருவிக்க வாய்ப்பு ஏற்படும் எனவும் சிவநேஷன் சுட்டி காட்டினார்

அத்தோடு இரண்டு உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தினருக்கு இதுவரை வீட்டுத்திட்டம் கிடைக்காதா நிலையில் அவர்கள் தற்காலிகமாக இருப்பிடங்களில் இன்னும் சிரமங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருவதாகவும் இவர்களுக்கு வீட்டு திட்டத்தை வழங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்

பிரதேச சபை உறுப்பினர் சிவனேசனால் முன்வைக்க பட்ட கோரிக்கைகள் நியமானது எனவும் இது பரிசீலனைக்கு எடுத்து கொள்ளபடுவதாகவும் ஒருகிணைப்பு குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: