மாற்றியமைக்கப்படுகின்றது அமைச்சரவை – ஜனாதிபதி -பிரதமர் இணக்கம்!

Sunday, September 11th, 2016

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தீர்மானித்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் அமைச்சர்கள் சிலர் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் முன்வைத்துள்ள முறைப்பாடுகள் காரணமாகவே அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசாங்கம் பதவியேற்ற காலத்தில் இருந்து நடந்த விலைமனு கோரல்கள் மூலம் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து அமைச்சர்களுக்கு எதிராக சாட்சியங்களுடன் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ranil-and-maithri

Related posts: