மார்பக புற்றுநோயால் வருடாந்தம் இலங்கையில் 700 – 800 பேர் உயிரிழப்பு – வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தகவல்!
Saturday, October 7th, 2023இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700 – 800 பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக வைத்தியர் சுராஜ் பெரேரா எச்சரித்துள்ளார்.
அத்துடன் 2020ஆம் ஆண்டளவில் இலங்கையில் 5,189 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனடிப்படையில் ஒரு நாளுக்கு 14 நோயாளர்கள் பதிவாவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஆரம்பகால நோயறிதல் நிலையானது நோயைக் குணப்படுத்த வழிவகுக்கும் என்று வலியுறுத்தினார்,
மேலும், நோய்வாய்ப்பட்ட சுமார் 10,000 பெண்களுக்கு முழுமையாக சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
20 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதாந்த மார்பகப் புற்றுநோய் பரிசோதனை அவசியம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புகையிரதம் மீது தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது.!
தமிழ் மக்களின் கலாசாரத்தின் முகவரியாகத் திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தா - அருட்திரு ராஜ்குமார் புகழாரம்!
வடக்கின் கல்வியை முன்னேற்ற நடவடிக்கை - பிரதமர்!
|
|