மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் 

Wednesday, March 16th, 2016

இம்மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம்- 4 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரமாக சுகாதார அமைச்சால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கைகள் சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைக்கும் அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு நடாத்தப்படவுள்ளது.

டெங்கின் தாக்கம் அதிகரித்துக் காணாப்படும் இடங்களில் இந்த டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இடம்பெறும்.

டெங்கின்  தாக்கம் காணப்படும் இடங்களில் நான்கு நாட்களிலும், பாதிக்கப்பட்ட இடங்களில் இரண்டு நாட்களும் இந்த நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நுளம்புக் கட்டுப்பாட்டு  வாரத்தின் போது குடியிருப்பாளர்களின் வீடுகள், பொதுவிடங்கள் என்பன சுகாதாரப் பகுதியினரால் தரிசிக்கப்படும். அத்துடன் சிரமதானம், கழிவகற்றல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக  யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி   பணிமனைக்குட்பட்ட  பகுதியில்   இந்த நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts:

கொழும்பில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு வரும் விமானங்கள் மூன்று மாதங்களுக்கு இரத்த...
சுன்னாகம் பிரதேச குடி நீர் பாவனைக்கு உகந்தது என தெரிவிக்க முடியாதுதுள்ளது - தேசிய நீர் வழங்கல் சபை ச...
வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர விசேட வேலைத்திட்டம் – துரிதப்படுத்துமாறு ஜனாதிப...