மார்ச் 27 முதல் மீண்டும் மதுரை – கொழும்பு இடையே விமானசேவை – ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு!

Friday, March 4th, 2022

மார்ச் 27 ஆம் திகதிமுதல் மீண்டும் மதுரை – கொழும்பு விமான சேவை தொடங்க உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக சர்வதேச விமான சேவை இந்தியாவில் பெப்ரவரி 28 வரை தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தொற்று பரவல் வேகம் கணிசமாக குறைந்துள்ளதால் மத்திய அரசு சர்வதேச விமான சேவை தடையை நீக்க முடிவு எடுத்துள்ளது.

இந்தநிலையில் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை மார்ச் 29 ஆம் திகதி தொடங்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது மதுரையில் இருந்து கொழும்புக்கு மார்ச் 27 ஆம் திகதி விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மதுரையில் இருந்து துபாய்க்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் விமான சேவை இயங்கி வந்த நிலையில் தற்போது தினசரி இயக்கப்படும் என விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: