மார்ச் 19 வரை 76 247 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வாராந்த அறிக்கையில் சுட்டிக்காட்டு!
Wednesday, March 22nd, 2023இந்த மாதத்தில் கடந்த 19 ஆம் திகதிவரை, நாட்டுக்கு 76 ஆயிரத்து 247 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சராசரியாக நாளொன்றில், 4013 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதாகவும், அதன்படி அந்நாட்டிலிருந்து 16 ஆயிரத்து 588 சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு வருகைதந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வருடத்தில் கடந்த 19 ஆம் திகதிவரையில் 286,431 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் 68 இலட்சம் வருமானம்!
இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசல் - கனேடிய வர்த்தக்கத்துறை அமைச்சரின் இந்திய பயணம் ஒத்திவைப்பு!
ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலிக்கு விஜயம்!
|
|