மார்ச் மாதம் 31 ஆம் திகதிமுதல் குறுகிய கால பாவனைக்குட்படுத்தும் பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை – வெளியானது வர்த்தமானி !

Sunday, January 31st, 2021

வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிமுதல் பிளாஸ்ட்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் சிலவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வர்த்தகம் மற்றும் கைத் தொழில்களில், விவசாய இரசாயண பொருட்களைப் பொதியிடுவதற்காக பயன்படுத்தப்படும் Polyethylene terephthalate மற்றும் PVC வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், மருந்துகள் மற்றும் உணவுகளைப் பொதியிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற பொலிதீன்களுக்கு தடைவிதிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், பலூன்கள், பந்துகள், நீரில் மிதக்கக் கூடிய அல்லது நீரில் விளையாடக் கூடிய பொருட்கள் மற்றும் நீர் விளையாட்டுத் துணைப் பொறிகளுக்கும் தடை விதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ அல்லது நோய் அறிகுறி சார்ந்த சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்ட்டிக் cotton bud என்பனவும் இதில் உள்வாங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: