மார்ச்சில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் கிடைக்க வாய்ப்புள்ளது –  பிரதமர்!

Friday, October 21st, 2016

இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகையை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பெறக்கூடியதாக இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தக்காலக்கட்டத்துக்குள் இலங்கை அரசாங்கம் தமது பொருளாதார திட்டங்களில்மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமது ஐரோப்பிய விஜயத்தை முடித்துக்கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைத்த அவர்,

ஜிஎஸ்பி பிளஸ் தொடர்பில் தமது பயணத்தின்போது முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளார். இந்தபிரச்சினையில் இன்னும் சில தொழில்நுட்ப விடயங்களை தீர்க்கவேண்டியுள்ளதாக அவர்சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு இலங்கை தமது ஆடை ஏற்றுமதியில் 87 வீத அதிகரிப்பை கொண்டிருந்தது.எனினும் பங்களாதேஸ், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பயன்படுத்தி தமது ஏற்றுமதியை406வீதமாக உயர்த்தியது.

இந்த நிலையில் இலங்கை ஆடை ஏற்றுமதியை 300 வீதமாக உயர்த்தினால், சர்வதேசத்திடம்கடன்படும் நாடாக இருக்காது என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை , ஜிஎஸ்பி பிளஸ் தொடர்பில் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளுடன்பேச்சுக்களை நடத்துவர் என்றும் பிரமதர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

blogger-image-1075572354

Related posts: