மாயைகளை காட்டி மக்களை மறுபடியும் ஏமாற்வதை ஏற்கமுடியாது – யாழ் .மாநகர சபையின் பாதீடு தோற்பதற்கு இதுவே காரணம் என்கிறார் றெமீடியஸ்!

Wednesday, December 16th, 2020

உத்தேச வருமானத்தை முழுமையாக நம்பி யாழ் மாநகரின் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான ஒரு பாதீட்டை இம்முறையும் யாழ் மாநகர ஆட்சியாளர்கள் முன்வைத்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கான ஒரு சதிவலைக்கள் எமது மக்களை சிக்கவைப்பதற்கு நாம் தயாரில்லை. அதனால் எமது கட்சியின் மக்கள் நலன்சார் நிலைப்பாட்டின் பிரகாரம் மக்களின் நலன்களை முன்நிறுத்தாத குறித்த பாதீட்டை தோற்கடிக்க நேர்ந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகரின் உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமிடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரின் பாதிடு தோற்கடிக்கப்பபட்டமை தொடர்பில் இன்றையதினம் (16) ஊடகளுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஃ

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

ஆட்சிப் பொறுப்பை தமிழரசுக் கட்சி ஏற்ற காலத்திலிருந்து மக்கள் நலன் மிக்க பாதீடு என சொல்லி தமது சுயநலன்களை முன்னிறுத்தி அதை எமது கட்சியின் கடும் எதிர்பிபின் மத்தியில் ஒருவாறு இரண்டு தடவைகள் நிறைவேற்றிவந்தது. அதேபோலவே இவ்வருடமும் மக்களை ஏமாற்றும்  நடவடிக்கைகளில் யாழ் மாநகரின் ஆட்சியாளர்கள் முற்படுவதனால் மக்களின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற வகையில் ஏனைய எதிர்த் தரப்பினரும் உணர்ந்துகொண்டனர்.

அத்துடன் உத்தேச வருமானத்தை முதன்மையாக கொண்டு கற்பனையிலான வரிபை நம்பி அதனூடாக வருமானம் வரும் என முன்மொழிந்து அதற்கு அங்கிகாரம் கோருவதென்பது ஏற்க முடியாததொன்றாகும்.

வருமானத்திற்குரிய வழிமுறைகளை தேடிக்கண்டுபிடிக்காமல் வரிகளை அதிகரித்து மக்கள் மீது அதை திணிக்க முற்படுகின்றனர். அத்துடன் தமது பதவிகளையும் தக்கவைக்க இந்த பாதீட்டை பகடைக்காயாக பாவிக்க முற்படுகின்றனர்.

அதுமட்டுமல்லாது ஒருசிலரின் சொந்த ஆடம்பர செலவீனங்களையும் அதிகரித்துள்ள ஆட்சியாளர்கள் தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளை புறந்தள்ளி விட்டு நியத்தில் வரமுடியாத பல கற்பனையான முன்மொழிவுகளை காட்டி சபையின் அங்கீகரத்தை மீண்டும் கோரியிருந்தனர்.

இதை எமது கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.  நாம் மக்களின் நலன்களை முன்னிறுத்தியே அரசியற் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றோம். எமது கட்சியின் கொள்கை வழிமுறையும் அதுவே.

அந்தவகையில் உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி செய்ய முன்வந்தவர்களுக்கு நாம் 2018 ஆம் ஆண்டு ஆதரவு வழங்கியிருந்தாலும் அவர்களது ஆட்சியை அவர்கள் மேற்கொள்ளும் மக்கள் நலன்சாரா திட்டங்களை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாரில்லை. அந்தவகையில் இந்த பாதீட்டை நாம் எதிர்த்தோம். அதனால் அது தோற்கடிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: