மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபரது மாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Tuesday, September 15th, 2020

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபரது மாற்றத்தை இடைநிறுத்துமாறு பாடசாலை சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான கோரிக்கைகளுடன் இன்றையதினம் அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஒரு தொகுதி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொர்றோர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தினருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது 2018 ஆம் ஆண்டு தமது பாடசாலைக்கு நியமனம் பெற்று இலங்கை அதிபர் சேவை தரம் 1 தரத்தை கொண்ட அதிபரான இந்திரகுமாரது வருகையை அடுத்து தமது பாடசாலை பல வழிகளிலும் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அதனது முழுமையான பயனை தமது கல்லூரி பெற்றுக்கொள்ள முன்னர் குறித்த அதிபரை பதவி உயர்வு என்ற காரணத்தை காட்டி புத்தூர் சோமஸ்கந்தா அதிபரான இளங்கோவை  நியமிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன் குறித்த அதிபரது பதவி உயர்வை தாம் மதிப்பதாகவும் தெரிவித்திருந்த கல்விச் சமூகத்தினர் அதிபர் இந்திரகுமாரை குறைந்தது 6 மாதங்களுக்காவது சேவையை தொடர்ந்து பணியாற்றுவதற்கேனும் அனுமதியை பெற்றுத்தருமாறும் கேரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பின்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: