மானிப்பாயில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: இளைஞன் படுகாயம்!

Sunday, October 8th, 2017

கூழாவடி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மாலை 6.45 மணியளவில் குறித்த வீதியால் மோட்டார் சைக்கிளில் அண்ணன் தம்பி இருவர் சென்ற நிலையில் அவர்களை பின்தொடர்ந்து வந்தவர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது

குறித்த வாள்வெட்டில் மானிப்பாயை சேர்ந்த 22 வயதுடைய விஜிதரன் இரண்டு கைகளிலும் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts: