மானிப்பாயில் நான்கு இளைஞர்கள் கைது!

201807070534214605_-----_SECVPF Wednesday, July 11th, 2018

மானிப்பாய் – கல்லுண்டாய் வெளி பகுதியில் சட்டவிரோதமான கூரிய ஆயுதங்களுடன் சென்ற நான்கு இளைஞர்கள் நேற்று இரவு கைதாகியுள்ளனர்.

இரண்டு உந்துருளிகளில் பயணித்த அவர்களை குறித்த பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து இரும்புக் கம்பிகள் மற்றும் வாள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் 18 வயதான இளைஞர் ஒருவர் போலி நாணயத்தாளுடன் கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் அவர் கைதானதாக யாழ்ப்பாண காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து 3 – 5000 ரூபாய் நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.


உலக சுற்றுலாத்துறை மாநாடு இலங்கையில்!
18 வீத நிதியினையே வட மாகாண கல்வி அமைச்சு செலவு செய்திருக்கிறது -  கல்விச் சமூகம் விசனம்!
ஆனைக்கோட்டையில் வாள்வெட்டு! மூவர் படுகாயம்!!
பரீட்சை மண்டபத்தில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொண்ட பிரச்சனை தொடர்பில் உரிய நடவடிக்கை – அமைச்சர் ராஜித...
வெளியானது புதிய அமைச்சரவை: சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரானார் பிரதமர்!