மாநகர பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு கல்வி அமைச்சர் யோசனை – அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, April 21st, 2021

மாநகர பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காகவும், அதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிசால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொழில் சந்தையில் அதிக கேள்வியுள்ள தொழில்களின் தரத்தை அதிகரிப்பதற்காக உயரிய தொழில் அங்கீகாரம் மற்றும் திறன்களுடன் கூடிய உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மையான தொழில்வாண்மையாளர்களை உருவாக்குவதன் சமகாலத் தேவை கண்டறியப்பட்டுள்ளது.

இதேநேரம் நாட்டில் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறும் மாணவர்களில் பல்கலைக்கழகக் கல்விக்கான வாய்ப்பு 20 சதவீதமானவர்களுக்கே கிடைகின்றது.

அவ்வாறான வாய்ப்புக்கள் கிடைக்காதவர்களை கைத்தொழில் மற்றும் தொழிற்பயிற்சியில் ஈடுபடுத்துவது குறிப்பிடத்தக்களவில் இடம்பெறவில்லை.

இந்நிலையிலேயே உற்பத்தித் துறைகளுக்கு தேவையான திறன்களை மேம்படுத்தி தொழில் வாய்ப்புக்களுக்குப் பொருத்தமான பட்டங்களை வழங்கும் உயர்கல்வி நிறுவனமாக மாநகர பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காகவும், அதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: