மாநகர. நகர, பிரதேச சபை திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிப்பு!

Thursday, September 28th, 2017

மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டமூலங்கள் மாகாண உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சமதிபால தலைமையில் கூடி, சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பணம் 23ஃ2 கேள்விகளையடுத்தே மாகாண சபைகள் மற்றும் உள்ளு+ராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டமூலங்களை தனித்தனியே சமர்ப்பித்தார்.

அமைச்சர் பைசர் முஸ்தபா திருத்தச் சட்டமூலங்களை சமர்ப்பித்து கொண்டிருந்த போது திடீரென 2 நமிடங்கள் வரை தடைப்பட்டது. இதன்போது அரசு இருட்டுக்குள் பல வேலைகளைச் செய்கின்றது. அதனால் தான் அரசின் திருத்தச் சட்டமூலங்களைப் பார்த்து மின்சாரமே அச்சமடைகின்றது. அமைச்சரும் இருட்டுக்குள் தான் திருத்த சட்டமூலங்களை சமர்ப்பிக்கிறார் என மகிந்த ஆதரவு பொது அணியினர் கிண்டலடித்தனர்

Related posts: