மாநகரின் சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சமமானதாக அமையவேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசரப உறுப்பினர் இரா.செல்வவடிவேல் வலியுறுத்து!

Wednesday, January 13th, 2021

யாழ் மாநகர சபையால் முன்னெடுக்கப்படும் சுகாதாரம் தொடர்பான செற்பாடுகளில் சபையின் செயற்பாடுகள் பாரபட்சமற்ற வகையில் அனைத்து மக்களினது நலன்களை முன்னிறுத்தி தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கடையின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா செல்வவடிவேல் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வில் சுகாதார நலன்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்.

மேலும்  வாழ்வாதாரத்துக்காக வார்க்கப்படும் கோழிப் பண்ணையாளர்களால் நாளாந்தம் பல பிரதேசங்கள் சுகாதார நலன்களில் பாதிக்கப்படுகின்றன.

அத்துடன் கோழிகளை வளர்ப்பவர்கள் அவற்றை இறைச்சியாக்கி விற்பனை செய்வதனால் அவற்றின் கழிவுகள் பொது இடங்களில் சட்டவிரோதமாக கொட்டப்படுகிறது. இதனால் சகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றது.இது தொடர்பில் கடந்த முதல்வரின் கவனத்திற்கு பல தடவை கொண்டுவரப்பட்டும் அது தீர்க்கப்படாதிருந்துள்ளது.

அதுமட்டுமல்லாது இவற்றை தடுப்பதற்காக சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.  ஆனால் அதன் செயலுருவம் இன்னும் நடைமுறையில் இல்லாமை வேதனையாக உள்ளது.

அத்துடன் குறித்த சட்டம் இதுவரை நடைமுறைக்கு வராமை அதிகாரிகளது அசமந்தப் போக்காகவும் இருக்கின்றது. அவ்வாறான அசமந்த போக்குகளும் ஒருபக்க சார்புகளும் இல்லாது சட்டம் அனைவருக்கும் சமமானதாக பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.இதனூடாகவே யாழ் மாநகரின் சுகாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றுமு; அவர் சுட்டிக்காட்டியிரந்ததுடன் யாழ் மாநகரின் தீயணைப்டப வாகனம் விபத்துக்கள்ளானமை தொடர்பான அறிக்கை இன்னமும் காட்சிப்படுத்தப்படவில்லை.அதனை காட்சிப்படுத்துவதோடு அச்சம்பவம் தொடர்பான பிரச்சினைக்கும் உரிய தீர்வு எட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன் புதிய முதல்வர் இவ்வாறான பக்கச்சார்புகளுக்க அசமந்தப் பொக்கக்கும் இடமளிக்காது மக்களின் நலன்களை முன்னிறுத்தி சேவை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

Related posts: