மாநகரின் ஆட்சி அதிகாரம் எமது கரங்களுக்கு கிடைத்திருந்தால் மக்களை பாதிக்கும் செயற்பாடுகள் எதுவும் இடம்பெற்றிருக்காது – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றீகன்!

Thursday, February 14th, 2019

எமது கரங்களுக்கு யாழ் மாநகரின் ஆட்சி அதிகாரம் கிடைத்திருந்தால் குடிநீருக்கான வரி  அதிகரிப்பு மட்டுமல்லாது மக்களுக்கான எந்தவொரு அசௌகரியங்களை ஏற்படுத்தும்  செயற்பாடுகளுக்கும் நாம் இடங்கொடுத்திருக்கமாட்டோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்  றீகன் தெரிவித்துள்ளார்.

குருநகர் தொடர்மாடி பகுதி மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிவதற்காக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதிக்கு நேரில் சென்று மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ் மாநகரை இன்று ஆட்சி செய்பவர்கள் மக்களது நலன்களை எள்ளளவும் சிந்தித்து பார்ப்பது கிடையாது. அவர்கள் இவ்வாண்டுக்கான பாதீட்டை கொண்டுவந்தபோது அதில்  குடிநீருக்கான கட்டண அதிகரிப்பு உள்ளடக்கப்பட்டிருந்ததை எமது கட்சி முழுமையாக எதிர்த்திருந்தது.

அதுமட்டுமல்லாது மக்களின் நலன்களை முன்னிறுத்தாத அந்த பாதீட்டையும் நாம் முழுமையாக எதிர்த்திருந்தோம். ஆனால் அந்த பாதீட்டை தோற்கடிப்பதற்கான அரசியல் அதிகாரம் எம்மிடம் சபையில் இல்லாததன் காரணமாக அது நிறைவேற்றப்பட்டு இன்று மக்களை அதிக பிரச்சினைக்குள்ளாக்கியுள்ளது.

இப்பகுதியில் அதிகமானவர்கள் வறிய மக்களாகவே காணப்படுகின்றனர். அதனால் அம் மக்களை இந்த குடிநீர் கட்டண அதிகரிப்பு பெரிதும் பாதித்துள்ளது.

இந்த நிலை வருவதற்கு காரணம் மக்களது தவறான அரசியல் தெரிவாகவே இருக்கின்றது. யாழ் மாநகரசபையின் ஆட்சி அதிகாரத்தை கடந்த காலத்தில் நாம் நிர்வகித்தபோது மக்களுக்கு பல இலவச திட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்தோம். ஆனால் இன்று அவ்வாறான நிலை காணப்படவில்லை என்று தெரிவித்தார்.

Related posts: