மாநகரசபை உறுப்பினர்களுக்கு யப்பானில் செயலமர்வு!

Sunday, June 3rd, 2018

மாநகரசபை உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான 3 தினங்களுக்கும் யப்பான் நாட்டில் இடம்பெறும் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள சகல மாநகர சபையின் உறுப்பினர்களுக்கும் இடம்பெறும் குறித்த கலந்துரையாடலுக்குச் செல்ல விரும்பும் உறுப்பினர்கள் தமது பெயர் விவரங்களை எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலுக்குச் சென்று வருவதற்கான ஏற்பாடுகளை மட்டுமே யப்பான் நாட்டின் தூதரகம் மேற்கொள்ளும்.

விமானச்சீட்டு, தங்குமிடம், உணவு உள்ளிட்ட சகல செலவுகளும் உறுப்பினர்களையே சாரும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: