மாத இறுதியில் 5, 473 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!

Thursday, March 15th, 2018

10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் 5 ஆயிரத்து 473 பேருக்கு மாத இறுதிக்குள் இடமாற்றம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்புக்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் மூன்று கட்டங்களாக இடம்பெறுகின்றது. இதன் முதற் கட்டம் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

உயர் தர வகுப்புகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 590 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் ஆயிரத்து 441 பேரில் 760 பேருக்கு இடமாற்றம் வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. மூன்றாம் கட்ட இடமாற்றத்தில் 5 ஆயிரத்து 473 பேருக்கு மாத இறுதிக்குள் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

Related posts: