மாத்தறை – வெலிகம வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து – சிறுமி பலி!

Wednesday, December 1st, 2021

மாத்தறை – வெலிகம, வள்ளிவல கிழக்கு பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீ விபத்தின் போது வீட்டிற்குள் இருந்த குறித்த சிறுமியின் பாட்டி மற்றும் சகோதரி  ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள வெலிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: