மாதா சொரூபம் சரிந்தது – உடுவில் அம்பலவாணர் வீதியில் சம்பவம்!

Monday, April 29th, 2019

உடுவில் அம்பலவாணர் வீதியில் அமைந்துள்ள செபமாலை மாதா தேவாலயத்தின் மேற்கூரையில் அமைந்துள்ள மாதா சொரூபம் சாய்ந்ததால் மக்கள் கூட்டம் கூடியதுடன் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது.

எனினும் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலமையை சுமூகநிலைக்குக் கொண்டு வந்தனர். ஆலயத்தின் மேற்கூரையில் கண்ணாடிக் கூட்டுக்குள் மாதா சொரூபம் அமைக்கப்பட்டிருந்த்து. அந்த சொரூபம் இன்று மாலை அவதானிக்கப்பட்ட போது சாய்ந்த நிலையில் காணப்பட்டது.

இந்த விடயம் தேவாலயத்துடன் தொடர்புடையவர்களுக்குத் தெரியப்படுத்த ஊர் முழுவதும் தகவல் பரவியது. அதனால் மக்கள் கூட்டம் கூடினர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் அங்கு வருகை தந்து மக்கள் கூட்டத்தை கலைத்து சொரூபம் சாய்ந்தமை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

அண்மையில் புனித பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் தென் சூடானுக்குச் சென்றிருந்த வேளை, அங்கு இடம்பெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருமாறும் சமாதானத்தை நிலைநிறுத்துமாறும் கோரி அந்நாட்டின் தலைவர்கள் கால்களில் விழுந்து வணங்கி அவர்களின் பாதத்தை முத்தமிட்டு கோரிக்கை விடுத்தார்.

இந்த ஒரு நிகழ்வு உலக வாழ் மக்களை ஒரு கணம் ஸ்தம்பிதம் அடையச் செய்திருந்தது. பாப்பரசரின் இந்த செயலை எண்ணி அனைவரும் கண்ணீர் சிந்தினர். தாழ்மையின் மறு உருவாகவும், நடமாடும் இயேசு கிறிஸ்துவாகவும் பாப்பரசர் பிரான்சிஸ் போற்றப்பட்டார்.

இயற்கையின் வடிவமாய் இறை நம்பிக்கைகள் இருக்கின்றன. இதேவேளை தேவாலயத்தின் தீ விபத்தும் மக்களை கதிகலங்க வைத்தன. இன்று இலங்கையில் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் இலங்கையர்களை மதங்கள் கடந்து துன்பத்தில் தள்ளியிருக்கிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் மாதா சொரூபம் சரிந்ததும் ஏதேனும் அறிகுறியா? என மக்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: