மாதாந்த கூட்டத்தில் உபதவிசாளர் மேற்கொண்ட தீர்மானத்தில் தவறு – வலி மேற்கு பிரதேச சபையின் விசேட கூட்டத்தில் குழப்பம்!

Thursday, December 30th, 2021

இலங்கையின் இறையாண்மையை மீறமாட்டோம் என உறுதி எடுத்துவிட்டு அதை மறந்து தத்தமது இஸ்டங்களுக்கு செயற்படுவதால்தான் குழப்பங்கள் ஏற்படுகின்றன என சுட்டிக்காட்டிய வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடநேந்திரன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரது வீடுகளுக்கும் அந்த வர்த்தமானியை அனுப்புவதாகவும் அதை கற்று  தெளிந்துவிட்டு அடுத்துவரும் சபை அமர்வுகளில் அதற்கேற்ற முறையில் நடந்துகொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் விசேட கூட்டம்  இன்றையதினம் நடைபெற்றது. இதற்போது கடந்த 26 ஆம் தேகதி நடைபெற்ற மாதாந்த சபை அமர்வு எதற்காக இடை  நடுவே ஒத்திவைக்கப்பட்டது என விளக்கம் தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுபினர் சிவகுரு பாலகிருஸ்ணன் தவிசாளரிடம் கோரியிருந்த நிலையில் சபையில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இந்நிலையிலேயே தவிசாளர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

முன்பதாக கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற அமர்வின்போது ஒரு பகுதி உறுப்பினர்களால் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆனாலும் அன்றைய சபையின் அமர்வை உபதவிசாளர் மேற்கொண்டிருந்த நிலையில் உள்ளூராட்சி மன்ற சட்ட வரையறைக்கு அமைவாக அவர் அதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் குறித்த சபையின் அமர்வை விட்டுபல உறுப்பினர்கள்  வெளியேறி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆனாலும் சபையில் சில உறுப்பினர்கள் இருந்துள்ளனர். சபையை முன்கொண்டு செல்ல கோரம் இல்லமையால் குறித்த உறுப்பினர்கள் கூடத்தை தொடர்ந்தும் நடத்தச்செல்லமுடியாது என கூறி ஒத்திவைக்கு உமதவிசாளரிடம் கோரியுள்ளனர்.. இதனால் உப தவிசாளர் சபையை இன்றையதினம் வரை ( 30/12/2021) ஒத்திவைத்திருந்தார்.

ஆனாலும் உள்ளூராட்சி மன்றங்களின் சட்டவரைமுறைகளுக்கு அமைய குறித்த போராட்டத்தை நடத்த அங்கிகாரம் இன்றி உறுப்பினர்கள் சென்றதால் தான் அந்த கூட்டம் இன்றையதினம்வரை ஒத்திவைக்க காரணமானது என்றும் இது எவ்வகையில் நியாயமானது என்று சபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு விளக்குமளிக்குமாறும் உறுப்பினரால் தவிசாரிடம் கோரப்பட்டது.

இந்நிலையில் குறித்த போராட்டம் உறுப்பினர்களின் விருப்புகளுக்கு அமைய நிடைபெற்ற தென்றும் ஆனாலும் சபையில் அதை தீர்மானமாக எடுக்காது சென்றமை சபையின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு அன்ற தலைமை வகித்த உபதவிசாளருக்கு தடையாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டிய தவிசாளர் நடனேந்திரன் குழப்பங்கள் ஏற்படாதிருப்பதற்கான அவர் சபையை இன்றையதினம்வரை ஒத்திவைத்திருந்தாதாகவும் தெரிவித்ததுடன் சபையின் உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட உறுப்பினர்கள்  அந்த சத்தியப்பிரமாணத்தை தற்போது மறந்துவிட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியதுடன் அதை அவர்கள் மீண்டும் நினைவூட்டிக் கொள்வதற்காக அந்த வர்த்தமானி அறிவிப்பை பிரதியெடுத்து உறப்பினர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை வலி மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் மயானங்களை எல்லை நிணயம் செய்த பின்னரே அபிவிருத்திகள் செய்ய வேண்டும். அவ்வாறு எல்லை நிர்ணயம் இல்லாத மயானங்க்ளுக்கு அபிவிருத்திகளை முன்னெடுப்பதால் நிலையான அடைவு மட்டத்தை எட்ட முடியாது எனவும் சிவகுரு பாலகிருஸ்னன் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கான மயான அபிவிருத்தி சபையை கட்டமைத்து உடலங்களை தகனமோ அல்லது அடக்கமோ செய்ய அறவீடாக 1000 ரூபா நிதியையும் வரையறை செய்து அந்த நிதியைக் கொண்டே மயானங்களின் தூய்மையை முன்னெடுக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்ட்டதுடன் எல்லை வரையறையை துறைசார் தரப்பினருக்கு வலியுறுத்தி விரையில் தீர்வைகாண முயற்சிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதுவேளை சபையின் ஆழுகைக்குள் 18 மயானங்கள் இருக்கின்ற போதும் ஒரு சில மயானங்களை தவிர அதிகமானவை எல்லை வரையறை செய்யப்படாத நிலையிலேயே உள்ளது என்றும் இதனால் அவை அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை அபிவிருத்திகளை பரந்துபட்ட வகையில் முன்னெடுக்க வேண்டுமே தவிர ஏற்கனவே சேவைகள் முன்ண்டுகப்பட்ட இடங்களில் தொடர்ந்தும் முன்னெடுப்பதால் பிரதேசத்தின் அபிவிருத்தி நிறைவுபெறாது என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனிடையே கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை ஏற்படுத்துவது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் திருமதி துவாரகா ஜெயகாந்தனால் முன்மொழிவொன்றும் சபையில் கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரேரணை சபையில் ஏடீகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அது தொடர்பில் முதற்கட்டமாக அறிவிப்புகளை விடுப்பதென்றும் அதன்பின்னர் அதற்கான குழு ஒன்றை அமைத்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகளும் நிறைவேற்றப்பட்டது.

இதுவேளை எதிர்வரும் புதிய ஆண்டின் முதலாவது கூட்டத்தினத்தன்று முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அடையாள போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவும் சபை ஏகமனதாக தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: