மாதம் 35 லட்சம் வாடகை செலுத்தும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு!

Sunday, September 11th, 2016

இலங்கை வெளிநாட்டலுவல்கள்அமைச்சானது செலின்கோ நிறுவனத்தின் 3 மாடிக் கட்டிடத்துக்கு மாதாந்தம் 35 லட்சம் வாடகையை செலுத்தி வருவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு ஸ்ரீமத் பாரோன் ஜயதிலக மாவத்தையில் தற்போது வெளிநாட்டலுவல்கள்அமைச்சு இயங்கி வரும் அலுவலகத்தை குறித்த செலின்கோ நிறுவன கட்டிடத்திற்கு மாற்றவதற்காக இந்த கட்டிடம் பெறப்பட்டுள்ள போதும் கடந்த 4 மாதங்களாக இது பயன்படுத்தப்படாமல் வாடகை மாத்திரம் வழங்கப்பட்டு வருவதாகவும் இதன்மூலம் தேசிய பணமானது அழிக்கப்படுவதாகவும் தெரிவித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்அனுப்பப்பட்;டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் மே மாதம் முதல் இந்த மாதம் வரை இந்தக் கட்டிடத்துக்கு 175 லட்சவாடகை பணம் வழங்கப்பட்டுள்ளதோடு, தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இயங்கி வரும் கட்டிடத்துக்கும் 4 லட்ச மாத வாடகை செலுத்தப்பட்டு வருவதாகசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த மே மாதம்முதல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது 39 இலட்சங்களை மாத வாடகையான இரண்டு கட்டிடங்களுக்கும் செலுத்தி வருவதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

foreign-ministry-720x480-450x300

Related posts:


நச்சுப் பொருட்களற்ற உணவுக் கலாச்சாரமொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர் மஹிந்த ராஜபக்...
இலங்கை புத்திசாலித்தனத்துடனும் நிதானத்துடனும் செயற்படவேண்டும் - அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகள் வேண்ட...
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் பணிகள் - தீவகத்தில் ஈ.பி.டி.பியின...