மாதத்தின் முதல் 15 நாட்களில் 77 ஆயிரத்து 552 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
Saturday, August 19th, 2023இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 77 ஆயிரத்து 552 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது பாரிய அதிகரிப்பாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கடந்த ஜுலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 65 ஆயிரத்து 612 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்ததுடன் கடந்த மாதத்தில் மொத்தமாக ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 39 சுற்றுலா பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளனர்.
அத்துடன் பிரித்தானியா, சீனா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் ரஷ்ய ஆகிய நாடுகளும் இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி யாழ்.நகரில் நாளை விழிப்புணர்வு ஊர்வலம்!
நெடுந்தாரகை பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்என கோரிக்கை!
இலங்கையிலிருந்து 174 இந்திய பிரஜைகள் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்!
|
|