மாதச் சம்பளத்தை கொவிட் நிதிக்கு வரவு வைக்கக் கோரி அமைச்சர் பந்துல குணவர்தன கடிதம்!

Sunday, August 22nd, 2021

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த ஓகஸ்ட் மாதத்திற்குரிய தனது சம்பளத்தை ‘இதுகாம’ கொவிட் நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதோடு, நாடாளுமன்ற செயலாளரிடம் தனது மாதச் சம்பளத்தை கொவிட் நிதிக்கு வரவு வைக்கக் கோரி கடிதத்தையும் வழங்கியுள்ளார்.

நாட்டின் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இந்த முன்மாதிரியான பணி ஜனாதிபதியால் பாராட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலர் 19 ஆம் திகதி அமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: