மாணவ மாணவியரின் பாதுகாப்பே மிகவும் முதன்மையானது : பாடசாலைகளை திறப்பது குறித்து இறுதி தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, May 14th, 2020

பாடசாலைகளை திறப்பது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒவ்வொரு மாணவரினதும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வரையில் பாடசாலைகளை திறக்கவும் முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் மேல் மாகாணத்தின் வலய மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களுடன் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டின் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நீர் வசதிகள் சிறிதளவும் இல்லை எனவும் அவ்வாறான பாடசாலைகளில் மாணவர்கள் கை கழுவுவது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவ மாணவியரின் பாதுகாப்பே மிகவும் முதன்மையானது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.உடல் வெப்பநிலையை அளவீடு செய்யும் கருவிகள் கொள்வனவு செய்யபய்பட உள்ளதாகவும் சுமார் 20000 கருவிகள் இவ்வாறு பாடசாலைகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில் சுமார் பத்தாயிரம் கைகழுவும் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: