மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம் – ஜனாதிபதி ஆணையகத்திடம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர திசெர வாக்குமூலம்!
Saturday, August 15th, 2020புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் என்பவர் அப்போது பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த ஸ்ரீகஜன் என்பவரால் விடுவிக்கப்பட்டாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் பழிவாங்கலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையகத்திடம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர திசெர இந்த உண்மையை வெளியிட்டுள்ளார்.
சுவிஸ் குமாரை தடுத்து வைத்து மருத்துவமனையில் சேர்க்குமாறு முன்னாள் மூத்த டி.ஐ.ஜி லலித் ஜெயசிங்க பிறப்பித்த உத்தரவை மீறி அவர் விடுவிக்கப்பட்டாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகஜன் கட்டளையிட சந்தேக நபரை டி.ஐ.ஜி. லால் குமார கமகே விடுவித்ததாக சிசிர திசெர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுவிஸ் குமாரை பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தவர் டி.ஐ.ஜி லலித் ஜெயசிங்க மற்றும் டி.ஐ.ஜி லால் குமார கமகே என்றும் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|